வாட்ஸ்அப் 2020 அறிமுகமாக உள்ள புதிய அம்சங்கள்…!

0
46

தற்பொழுது உள்ள காலகட்டத்தில் நமது முக்கால்வாசி பொழுது சமூக வலைத்தளங்களே முக்கிய பங்கு வகிக்கிறது. அதிலும்,வாட்ஸ் ஆப் செயலி இன்றியமையாத பங்கு வகிக்கிறது.ஒவ்வொரு ஆண்டும் வாட்ஸ் ஆப் செயலி புது அப்டேட் அறிமுகப்படுத்தி வரும்.அந்த வகையில்,எதிர்வர உள்ள 2020 புத்தாண்டு முதல் மேலும் பல சிறப்பு அப்டேட்ஸ்களை தன்னகத்தே கொண்டு வந்து அசத்த உள்ளது வாட்ஸ் அப் செயலி.

அடுத்த வாரம் முதல் டார்க் மோட், பேஸ் அன்லாக் எனப்படும் முக அங்கீகாரம், டெலிட் செய்த மெசெஜ்களை திரும்ப கொண்டு வருவது, குறிப்பிட்டவர்களுக்கு மட்டும் லாஸ்ட் சீன் டைமிங் காட்டும் வசதி உள்ளிட்ட பல சிறப்பம்சங்கள் வாட்ஸ் அப்பில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.