பிக்பாஸ் சீசன் 4 இல் களமிறங்கும் அடுத்த பிரபலம் யார் தெரியுமா?

0
41

தனியார் தொலைக்காட்சி நடத்தும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு மிகப் பெரிய ரசிகர் பட்டாளமே இருக்கிறது. இந்நிலையில் சீசன் 3 மாபெரும் வெற்றி பெற்று முடிந்த நிலையில் இந்த ஆண்டு கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் ஏற்பட்டதால் நிகழ்ச்சியை இன்னும் துவங்கவில்லை.

இதற்கிடையே இந்த ஆண்டு பிக் பாஸ் நிகழ்ச்சி நடக்காது என்று எல்லாம் வலைத்தளங்களில் பேச்சு கிளம்பியது. இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சி கண்டிப்பாக நடக்கும் என்று கூறும் வகையில் இரண்டு ப்ரொமோ வீடியோக்களை அடுத்தடுத்து வெளியிட்டு ரசிகர்களை குஷியில் ஆழ்த்தியது அந்த தொலைக்காட்சி . இந்நிலையில் அதில் யார் பங்கேற்பார்கள் என்று பலரும் இப்போதே கணக்குப் போடத் துவங்கிவிட்டார்கள்.

இதனையடுத்து கும்கி, கொம்பன், சுந்தரபாண்டியன் போன்ற பல படங்களில் நடித்த நடிகை லக்ஷ்மி மேனன். சில ஆண்டுகளாக சினிமாவில் இருந்து விலகி இருந்தார். இந்நிலையில் அவர் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க இருக்கிறார். மேலும் வருத்தப்படாத வாலிபர் சங்கம் , தெகிடி,தமிழுக்கு எண்1அழுத்தவும் போன்ற படங்களில் துணை வேடங்களில் நடித்த நடிகை ஷாலு ஷம்மு பங்கேற்க இருக்கிறாராம்.

இதற்கிடையில் அடுத்து லிஸ்டில் இருக்கும் பெயர்கள் கோ, அஞ்சான் போன்ற படங்களில் நடித்த நடிகை சஞ்சனா சிங், மற்றும் நடிகர் ரியோவிடம் கடைசி கட்ட பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் கூறப்பட்டது .

இதையடுத்து பிரபல விஜே மற்றும் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்ததால் பட நடிகர் ரக்க்ஷனின் பெயரும் அடிபடுகிறது. இன்ஸ்டாகிராமில் ரசிகர் ஒருவர் அவரிடம் ப்ரோ, ஏன் விஜய் டிவியில் வருவது இல்லை? என்று கேட்க. அதற்கு, உடனடியாக பதிலளித்த அவர், விரைவில் ஸ்பெஷலான ஒன்றில் வருகிறேன் என்று பதிலளித்தார். அவர் வரவிருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியை தான் மறைமுகமாக சொல்கிறார் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். எனினும், அவர் வருவாரா இல்லையா என்பதை நாம் காத்திருந்து தான் பார்க்க வேண்டும்.