ரத்தக்கறை படிந்த சுத்தியல்…நடிகர் விஷ்ணு விஷால் வெளியிட்ட அடுத்த படத்தின் அப்டேட்…

0
114

கடந்த 2009ம் ஆண்டு வெளியான வெண்ணிலா கபடிக்குழு என்ற படத்தின் மூலமாக கதாநாயகனாக அறிமுகமானா பிரபல நடிகர் விஷ்ணு விஷால்.

தற்கால தமிழ் சினிமாவில் மாஸ் ஹீரோ பட்டியலில் இவர் இல்லை என்றாலும் இவர் படத்திற்கு எப்போதும் மவுசு உண்டு. இளம் ஹீரோ என்றபோது நீர் பறவை, ராட்சசன் மற்றும் மாவீரன் கிட்டு போன்ற படங்களில் தனது முதிர்ந்த நடிப்பினை வெளிப்படுத்தி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றவர். கடந்த 2019ம் ஆண்டு இவர் நடிப்பில் படங்கள் எதுவும் வெளிவரவில்லை என்றபோது இந்த ஆண்டு நான்கு படங்களில் அவர் நடித்து வருகின்றார்.

இந்நிலையில் ஒரு சிறப்பான செய்தி ஒன்றை நேற்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தின் மூலம் தெரிவித்துள்ளார். தனது அடுத்த படத்தின் தலைப்பு இன்று மாலை 4.07 மணிக்கு வெளியிடப்படும் என்ற அறிவிப்பு தான் அது. ‘ரத்தக்கறை படிந்த சுத்தியல், மறுபுறம் play boy இதழ் என்று இப்போதே படத்தின் மீதான ஆர்வத்தை அதிகரிக்கும் படமாக மாறியுள்ளது என்றே கூறலாம்.