நடிகர் சங்க கட்டடத்தின் தற்போதைய நிலைமை என்ன தெரியுமா ?? நீங்களே பாருங்க…

0
41

தற்போது நடிகர் சங்க தேர்தல் வரும் 23 அன்று நடைபெற உள்ளது. இதற்காக நாசர் தலைமையிலான பாண்டவர் அணியும், பாக்கியராஜ் தலைமையிலான ஸ்வாமி சங்கரதாஸ் அணியும் போட்டியிடுகின்றனர். இந்நிலையில் கடந்த முறை வெற்றி பெற்றபோது கண்டிப்பாக நடிகர் சங்கத்துக்கு கட்டடம் காட்டுவோம் என விஷால் தெரிவித்தார். தென்னிந்திய நடிகர் சங்கத்திற்க்காக கட்டடம் சென்னை தி.நகரில் கட்டப்பட்டு வருகிறது. 2017 ஆம் ஆண்டு முதல் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இடையில் கோர்ட் விதித்த தடை காரணமாக பணிகள் நிறுத்த பட்டிருந்தலாலும் தற்போது கட்டுமான பணிகள் இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. இதற்க்காக நிதி திரட்டுவதற்காக நட்சத்திர கிரிக்கெட், கலை நிகழ்ச்சிகள் என பல்வேறு நிகழ்ச்சிகள் மூலம் நிதி திரட்டப்பட்டது.

மிக பிரம்மாண்டமாக கட்டப்பட்டு வரும் இந்த கட்டடதிற்கு 30 கோடி வரை செலவாகியுள்ளது. இதுமட்டுமல்லாமல் கட்டுமான பணிக்காக மேலும் பணம் தேவைப்படுவதால் மீண்டும் காலை நிகழ்ச்சி நடத்தி நிதி திரட்ட முடிவு செய்திருந்தனர். ஆனால் தற்போது நடிகர் சங்க தேர்தல் வருவதால் அது தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கட்டுமான பணிக்காக நடிகர் கார்த்தி ஒரு கோடி ரூபாய் வழங்கியுள்ளார். அதேபோல் விஷால் 25 லட்சமும் வழங்கியுள்ளார்.

இந்நிலையில் தற்போது அதன் வேலைகள் எந்த அளவில் முடிந்துள்ளது என்பதனை காண நடிகர் விஷால் அங்கு சென்றுள்ளார். அதுமட்டுமின்றி விரைவில் அந்த கட்டிடத்தை கட்டி முடிப்போம் எனவும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here