இறந்து போன மகளை வி.ஆர் ( Virtual Reality) உலகத்தில் பார்த்து ரசித்த அம்மா..!நெகிழ்ச்சி வீடியோ

0
100

உறவுகளில் ஏற்படும் பிரிவுகளில் கொடுமையான விஷயம் நமக்கு பிடித்தவர்களது மரணம் தான்.அப்படி நமக்கு நெருக்கமானவர்களை நம் கனவில் சந்தித்தால் கூட அந்த வாய்ப்பை நிச்சயம் தவறவிட மாட்டோம்.

கண்டறியப்படாத ஒரு நோயினால் பாதிக்கப்பட்டு 2016-ஆம் இறந்துவிட்ட தனது மகளை வி.ஆர் ( Virtual Reality) தொழில்நுட்பம் மூலமாக தனது மகளைச் சந்தித்த நிகழ்வை ஆவணப்படமாக வெளியிட்டிருக்கிறது தென்கொரியாவைச் சேர்ந்த ”Meeting You” திரைக்குழு. கொரியாவைச் சேர்ந்த எம்.பி.சி என்ற நிறுவனம், சிறுமி நயோனின் உருவத்தை உண்மைக்கு மிக நெருக்கமாக வடிவமைத்துள்ளது.