மேற்கிந்திய தீவுஅணி பவுலரை பழி தீர்த்த விராட் ஹோலி…!வைரல் வீடியோ

0
396

இந்தியா – மேற்கிந்திய தீவுகள் அணி மோதிய முதல் டி20 போட்டி ஐதராபாத் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் விளையாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 207 ரன்கள் குவித்தது. இமாலய இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி கே.எல்.ராகுல் மற்றும் கேப்டன் விராட் கோலியின் அபார ஆட்டத்தால் 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

சிறந்த ஆட நாயகன் ஆக விராட் கோலி தேர்வு செய்யப்பட்டார்.இந்நிலையில் ,இந்த போட்டியின் போது விராட் கோலி செய்த செயல் அனைவரையும் திரும்பி 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒரு சம்பத்தை நினைவு கூர்ந்தது.மேலும் இந்த போட்டியின் மூலம் விராட் கோலி பய் தீர்த்து கொண்டார்.

அதாவது,ஜமைக்காவில் 2017ல் நடைபெற்ற போட்டியில் விராட் கோலி 29 ரன்கள் எடுத்திருந்த போது கெஸ்ரிக் வில்லியம்ஸ் பந்துவீச்சில் அவுட்டாகி வெளியேறுவார். விராட் கோலியின் விக்கெட்டை கொண்டாடும் வகையில் வில்லியம்ஸ் செக் புக்கில் கையெழுத்து போடுவது வித்தியாசமான செய்கை செய்து கோலியை வெறுப்பேற்றுவார்.

அதை மறக்காத கோலி நேற்று நடைபெற்ற போட்டியில் வில்லியம்ஸ் பந்துவீச்சில் சிக்ஸர் அடிப்பார். பின் வில்லியம்ஸ் செய்கையை கேலி செய்வது போன்று அவரும் செய்து காட்டுவார். இதை பார்த்த வில்லியம்ஸ் தேவையா இது நமக்கு என்பது போல்திரும்பி செல்வார்.

மேலும்,விராட் கோலியின் இந்த வீடியோ தற்பொழுது பரவலாக வைரலாகி வருகிறது.