குழந்தையை மடியில் வைத்து கொஞ்சி விளையாடிய ராகுல் காந்தி-வைரல் வீடியோ

0
114

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, தனது தொகுதியான வயநாட்டில் சில நாட்களாக சுற்றுப்பயணம் செய்து வருகிறார்.பள்ளி நிகழ்ச்சிகள், பொது நிகழ்ச்சிகள் என்று அவர் கலந்துகொண்டு வருகிறார். சில வாரங்களுக்கு முன்னர் பள்ளியில் பாம்பு கடித்து உயிரிழந்த சிறுமியின் வீட்டுக்குச் சென்ற அவர், குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

அதன் பின்னர் வயநாட்டில் உள்ள கடைக்கு சென்று தேனீர், உணவு போன்றவற்ற்றை அருந்தினர் .இந்த புகைப்படமும் சமூக வலைத்தளத்தில் அதிகளவில் பரவியது.

இந்நிலையில் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் சிறுவன் ஒருவனை தனது மடியில் உட்கார வைத்து அவர் கொஞ்சி விளையாடினார். அந்த சிறுவனும் ராகுல் காந்தியின் முகத்தை பிடித்துப் பார்த்து விளையாடினான்.இந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.

மேலும் சில நாட்கள் அவர் தொகுதியில் சுற்றுப்பயணம் செய்து பல நிகழ்ச்சிகளில் பங்கேற்பார் என்று கட்சி நிர்வாகிகள் கூறியுள்ளனர்.