இணையத்தில் இதயங்களை கொள்ளையடித்து சென்ற 2 வயது சிறுவனின் வைரல் புகைப்படம்.!

0
37

தற்பொழுது பரபரப்பாக பேசப்படுவது டெல்லியில் நடைபெற்று வரும் வாக்கு எண்ணிக்கை தான்.அந்த வகையில் கடந்த 8 ஆம் தேதி நடைபெற்ற டெல்லி தேர்தலானது,இன்று வாக்கு எண்ணப்படுகிது.

டெல்லி சட்டமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி வெற்றிவாய்ப்பை பெற்றுள்ள நிலையில், முதலமைச்சர் கெஜ்ரிவால் போல் வேடமணிந்த 2வயது குழந்தை இணையவாசிகளின் இதயங்களை வென்றுள்ளது.

டெல்லி தேர்தல் வெற்றியை ஆம் ஆத்மி கட்சித் தொண்டர்கள் பல்வேறு வகையில் கொண்டாடி வருகின்றனர். முன்னதாக ஆம் ஆத்மி கட்சியின் ட்விட்டர் பக்கத்தில், முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் போல் வேடமிட்ட 2 வயது சிறுவனின் புகைப்படம் பகிரப்பட்டு, மஃப்லர்மேன் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்தப் புகைப்படம் வைரலானதை தொடர்ந்து, அந்த சிறுவனின் மேலும் சில புகைப்படங்களும், வீடியோக்களும் இணையவாசிகளால் பகிரப்பட்டு வருகிறது.