இந்த ஆண்டில் வைரலான முதல் டிக்டாக் சேலஞ்ச்…இன்னும் என்னலாம் வருமோ…! வீடியோ

0
123

சமூக வலைத்தளங்களில் மிக அதிகம் பயன்படுவதில் ஒன்றான டிக்டாக்கில் கடந்த சில ஆண்டுகளில் மட்டும் கிகி சேலஞ்சு, கரப்பான்பூச்சி சேலஞ்சு, ஐஸ் சேலஞ்ச் , மோமோ சேலஞ்ச், ப்ளூ வேல் சேலஞ்ச், ஐஸ் பக்கெட் சேலஞ்ச்,டென் இயர்ஸ் போட்டோ சேலஞ்ச், வீடியோ கால் சேலஞ்ச் , காக்ரோச் சேலஞ்ச் என பல வினோதமான மற்றும் ஆபத்தான சேலஞ்சுகள் வைரலானது. தற்போது இந்த வரிசையில் இணைந்துள்ளது #cerealchallenge.

இந்த வருடத்தின் முதல் சேலஞ்ச் ஆக டிக் டாக் செயலியில் வைரலாகி வருகின்றது.காலையுணவாக உண்ணக்கூடிய பாலில் கலந்து சாப்பிடும் கான்பிளக்ஸை வைத்து இந்த சவாலை எதிர்கொண்டு வருகின்றனர்.

வாயில் பாலை ஊற்றி கான்பிளக்ஸை போட்ட பின்னர் மற்றொருவர் அதனை ஸ்பூனில் எடுத்து உண்ண வேண்டும். இது தான் #cerealchallenge. பாலை அதிகம் வாயில் ஊற்றிவிட்டு சிரிக்கும் போது கான்பிளக்ஸை வாயில் போட்டு இந்த சவாலை எதிர்கொள்கின்றனர் சிலர்.