அந்த படத்தில் நடித்தது தான் நான் செய்த மிகப்பெரிய தவறு–விமல்..

0
124

விமல் தமிழில் துணை நடிகராக பல படங்களில் நடித்து அதன் பின் பசங்க படத்தின் மூலம் கதாநாயகராக அறிமுகமாகினர். பின் களவாணி, கேடி பில்லா கில்லாடி ரங்கா, புலி வால் என பல படங்களில் நடித்து விட்டார். தற்போது இவர் நடிப்பில் களவாணி படத்தின் இரண்டாம் பாகம் வெளியானது. சமீபத்தில் இதன் வெற்றிவிழா நடைபெற்றது.

இதில் கலந்து கொண்டு பேசிய அவர் அதில் ” நான் தெரியாமல் இவனுக்கு எங்கயோ மச்சம் இருக்கு படத்தில் நடித்து விட்டேன். அதன் மூலம் பல எதிர்மறையான விமர்சனங்களையும் பெற்றேன். இனி அதுபோன்ற படங்களில் சத்தியமாக நடிக்க மாட்டேன். களவாணி 2 திரைப்படம் வெற்றிபெற்றது மகிழ்ச்சியளிக்கிறது. நல்ல கதை அமைந்தால் கண்டிப்பாக களவாணி முன்றாம் பாகத்திலும் நடிப்பேன்” என கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here