‘விக்ரம் 60’ படம் குறித்து வெளியாகும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!

0
60
Vikram At The 'Kadaram Kondan' Press Meet

கடாரம் கொண்டான் படத்திற்குப் பிறகு சியான் விக்ரம் கோப்ரா மற்றும் பொன்னியின் செல்வன் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படத்தில் விக்ரமுக்கு மிக முக்கிய கதாபாத்திரம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் கோப்ரா படத்தில் விக்ரம் சுமார் 20 கெட்டப்களில் நடித்துவருகிறார்

இந்த இரண்டு படங்களுமே மிகப் பிரமாண்ட பட்ஜெட்டில் உருவாகி வருகின்றன. இந்நிலையில் விக்ரம் அடுத்து தனது அறுபதாவது படத்திற்காக இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் உடன் கூட்டணி சேர்கிறார் என்று கூறப்பட்டு வருகிறது. இது தொடர்பான செய்தி கடந்த ஒரு வாரமாக கோலிவுட்டில் அதிகம் பரவி வந்தது.

இந்த படத்தில் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் ஒரு முக்கிய ரோலில் நடிக்கிறார் என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று மாலை 5 மணிக்கு வெளிவரும் என்று செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் ட்விட்டரில் தெரிவித்துள்ளது. இதே நிறுவனம் தான் விஜய்யின் மாஸ்டர் பட ரிலீஸ் உரிமையை வாங்கி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இது ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 2017 விக்ரம் இருமுகன் ஷூட்டிங்கில் இருந்தபோது அவரை சந்தித்த கார்த்திக் சுப்பராஜ் இந்த கதையை கூறியிருக்கிறார் அது பிடித்துவிடவே உடனே ஓகே சொல்லிவிட்டாராம் விக்ரம். ஆனால் பல்வேறு காரணங்களால் தள்ளிப் போய்வந்த இந்த ப்ராஜக்ட் தற்போது துவங்குகிறது.

படக் குழு பற்றிய முழு விவரம் இன்று அஞ்சு மணிக்கு வெளியாகும் அறிவிப்பில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

துருவ் விக்ரம் ஆதித்ய வர்மா படம் மூலமாக சினிமாவில் அறிமுகம் ஆனார். அந்த படத்தின் ஆரம்பம் முதல் இறுதி வரை விக்ரம் தான் உடன் இருந்து அனைத்தையும் செய்தார். அதனால் துருவ் நடிப்புக்கு ஓரளவு நல்ல வரவேற்பு கிடைத்தது. அதற்கு பிறகு விக்ரம் தனது இரண்டாவது படத்தை ஒப்புக்கொள்ளாமல் இருந்தார்.

இந்த நிலையில் தான் தனது தந்தை உடன் 60வது படத்தில் அவர் நடிக்கவுள்ளார் என்று தகவல் வந்தது. இது விக்ரம் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.