விஜய்யின் ‘மாஸ்டர்’ மாதிரி பாலிவுட்டிலும் ரிலீசானா நல்லா இருக்கும்…!பிரபல இயக்குனர்

0
25

தளபதி விஜய்யின் ‘மாஸ்டர்’ படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி திரைப்படத் துறையிலும், குறிப்பாக தியேட்டர் வியாபாரத்திலும் கொரோனா வைரஸ் தொற்றுநோயால் கிட்டத்தட்ட ஒன்பது மாதங்களாக நிறுத்தப்பட்ட படம் தற்பொழுது திரையரங்கில் ஓடி கொண்டிருக்கிறது. கமர்ஷியல் என்டர்டெய்னர் பார்வையாளர்களை அதிக எண்ணிக்கையில் திரையரங்குகளுக்கு அழைத்து வந்துள்ளது.

ஏற்கனவே ஹாலிவுட் மற்றும் பிற வெளிநாட்டு ஊடகங்கள் ‘மாஸ்டர்’ பாக்ஸ் ஆபிஸை மீண்டும் ஒரு முறை துவக்கியுள்ளன என்பதை உறுதிப்படுத்தியுள்ளன, மேலும் இந்த படம் கடந்த வாரத்தில் உலகளவில் முதலிடத்தில் உள்ளது என்பதும் தெரிய வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தமிழில் வெளியான ’மாஸ்டர்’ திரைப்படம் பொதுமக்களை திரையரங்குகளுக்கு வரவழைத்ததுபோல பாலிவுட்டிலும் ஒரு படம் தேவை என பிரபல பாலிவுட் இயக்குனர் அனுராக் பாசு கூறியுள்ளார்.திரையரங்குகளுக்கு இன்னும் ரசிகர்கள் சகஜமாக வரவில்லை என்றும் திரையரங்குக்கு ரசிகர்களை வரவழைக்க ஒரு பெரிய படம் வெளியாக வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Anurag Basu directorial Life In A… Metro's sequel to be titled Ludo? :  Bollywood News - Bollywood Hungama

’மாஸ்டர்’ படம் வெளியாகி அந்த பகுதி மக்களை திரையரங்கிற்கு வரவழைத்தது போல் பாலிவுட்டிலும் ஒரு திரைப்படம் வரவேண்டும் என்றும் அப்படி வந்தால் இங்கும் திரையரங்குக்கு பொதுமக்கள் வருவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

மர்டர், கேங்ஸ்டர், கைட்ஸ், உள்ளிட்ட படங்களை இயக்கிய அனுராக் பாசு தற்போது ’லூடோ’ என்ற திரைப்படத்தை இயக்கி உள்ளார். இந்த படம் விரைவில் ஓடிடியில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.