‘பிக் பாஸ் 4’ போட்டியாளர்களின் பைனல் லிஸ்டில் இவங்களாம் இருக்காங்களா ?வெளியான தகவல்

0
106

கமல்ஹாசன் வழங்கும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ‘பிக் பாஸ் 4’ தமிழ் அக்டோபர் 4 ஆம் தேதி ஒளிபரப்பத் தொடங்கும் என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன, ஏற்கனவே போட்டியாளர்களுக்கான தேர்வு நடந்து வருகிறது என்று கூறப்படுகிறது. ரம்யா பாண்டியன், சிவானி நாராயணன், புகழ், கிரண் மற்றும் இன்னும் சில பெயர்கள் இந்த ஆண்டு தயாரிப்பில் நட்சத்திரங்களுக்கு கூறப்படுகின்றன.

இந்நிலையில் ஃபைனல் லிஸ்டில் இருப்பவர்களில் மேலும் சிலர் குறித்து தகவல் கிடைத்துள்ளது. அதில் இயக்குநரும் நடிகருமான அனுமோகன், ரெட்டை ரோஜா சீரியலில் நடித்துள்ள ஷிவானி நாராயணன் உள்ளிட்டோர் ஃபைனல் லிஸ்டில் இருக்கிறார்களாம். அதில் யாரெல்லாம் செல்வார்கள் என்பது குறித்து விஜய் டிவியின் முடிவுக்கு பிறகே தெரியும். மேலும் டிக்டாக் இலக்கியாவுடனும் தற்போது பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம்.

‘பிகில்’ படத்தில் தென்றலாக கலக்கிய அம்ரிதா, பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறார் என்ற பேச்சு அடிபட்டது. இந்நிலையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறீர்களா? என்ற கேள்விக்கு ”தெரியல, சஸ்பென்ஸாகவே இருக்கட்டும்” என்றார். மறைமுகமாக நிகழ்ச்சியில் ஆமோதிப்பது போலவே அவரது பதில் இருந்தது. மேலும் போட்டியாளர்கள் அனைவரும் 17 நாட்கள் ஒரு ஹோட்டலில் குவாரண்டினில் இருப்பதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதுவும் எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை.