முதல் முறையாக திரைப்படத்திற்கு கதை எழுதும் விஜய் சேதுபதி !! அதுவும் இந்த இரண்டு முக்கிய கதாநாயகர்களின் படத்திற்கு…

0
162

விஜய் சேதுபதி தற்போது மிகவும் பிஸியான நடிகர். ஏரளான படங்களில் தற்போது நடித்து வருகிறார். இவரின் சிந்துபாத் திரைப்படம் அடுத்த வாரம் திரைக்கு வரவுள்ளது. அதுமட்டுமல்லாமல் லாபம், மாமனிதன், க/பெ. ரணசிங்கம், சங்கத்தமிழன்,எடக்கு என பல படங்களை கைவசம் வைத்துள்ளார். இதுமட்டுமின்றி அமலாபால் உடன் இணைந்து பெயரிடப்படாத புதிய திரைப்படம் ஒன்றிலும் நடித்து வருகிறார் இவர். இந்நிலையில் தற்போது திரைப்படத்திற்கு கதை எழுதுவது என புதிய அவதாரமும் எடுத்துள்ளார் இவர்.

விஷ்ணு விஷால் தனது 18 வது படத்தில் விக்ராந்த் உடன் இணைந்து நடிக்கிறார். இந்த படத்தினை சஞ்சீவ் இயக்குகிறார். யுவன் ஷங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைக்கிறார். இந்த மேக கூட்டணியில் உருவாகும் படத்திற்கு விஜய் சேதுபதி கதை எழுதியிருப்பது அனைவரையும் வியக்கவைத்துள்ளது.இதன் படப்பிடிப்பு விரைவில் துவங்கும் எனவும் படக்குழு அறிவித்துள்ளது.