வித்தியாசமாக வெளியான விஜய்சேதுபதி படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்

0
63

தமிழில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் சேதுபதி மலையாளத்தில் ஜெயராம் உடன் ‘மார்க்கோனி மித்தாய்’ என்ற படத்தில் கவுரவ கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளைத் தாண்டி இந்தியில் மாநகரம் ரீமேக், அமீர் கான் உடன் ‘லால்சிங் சட்டா’ ஆகிய படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்நிலையில் மார்க்கோனி மித்தாய் படத்தை அடுத்து மீண்டும் ஒரு மலையாள படத்தில் நடித்து வருகிறார் விஜய் சேதுபதி. அறிமுக இயக்குநர் வி.எஸ். இந்து இயக்கும் இந்தப் படத்தின் கதை விஜய் சேதுபதிக்கு பிடித்திருந்ததால் ஒன்றரை வருடத்துக்கு முன்பே நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார். கொரோனா அச்சுறுத்தலால் தள்ளிப் போன இந்தப் படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் கேரளாவில் தொடங்குகிறது.

விஜய் சேதுபதியின் இரண்டாவது மலையாள படமாக உருவாகும் இந்தப் படத்துக்கு ‘19 (1)(a)’ என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. அதற்கான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் நடிகர்களின் புகைப்படம் இடம்பெறாமல் படத்தின் டைட்டில் மட்டுமே அனைவரையும் கவரும் விதமாக வித்தியாசமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படத்தில் நித்யா மேனன், இந்திரன்ஸ், இந்திரஜித் சுகுமாறன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஆண்டோ ஜோசப் பிலிம் கம்பெனி தயாரிக்கும் இந்தப் படத்துக்கு கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார்.

விஜய் சேதுபதி – விஜய்யுடன் இணைந்து நடித்திருக்கும் ‘மாஸ்டர்’ திரைப்படத்தின் ரிலீசுக்காக ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். நவம்பர் 10-ம் தேதி முதல் தமிழகத்தில் திரையரங்குகள் திறக்கப்படவுள்ள நிலையில் மாஸ்டர் படக்குழு விரைவில் மாஸ்டர் படக்குழு அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதியை அறிவிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.