இந்தியாவின் எதிர்கால விண்வெளி வீராங்கனையின் கனவை நிறைவேற்றிய மக்கள் செல்வன்!!!

0
134

மக்கள் செல்வன் என ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படுபவர் விஜய் சேதுபதி. இவர் ஒரு நடிகர் என்பதையும் தாண்டி பல செயல்களால் நம்மை கவர்ந்து வருவார். பல சமூக தொண்டுகளை செய்து அசத்துவார் இவர். அந்த வகையில் தேனீ மாவட்டம் அல்லி நகரத்தை சேர்ந்த உதயகீர்த்திகா என்ற மாணவி விண்வெளி படிப்பிற்காக தேர்வாகியுள்ளார். ஆனால் அவரால் அதற்க்கான கட்டணத்தினை செலுத்த முடியாத நிலையில் இருந்துள்ளார்.

இதனையறிந்த மக்கள் செல்வன் விஜய் சேதுபதி ரூபாய் 8 லட்சத்தை வழங்கி அந்த மனைவியை விண்வெளி படிப்பினை நன்றாக படி என கூறியுள்ளார். அவர் அளித்த ரூபாய் 8 லட்சத்தை அவரது ரசிகர்கள் மூலம் அந்த மாணவியிடம் கொண்டு சேர்க்கப்பட்டுள்ளது.

இந்த செயலின் மூலம் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி மக்கள் மனதில் நீங்காத இடத்தினை பிடித்துள்ளார். இந்த செயல் இவற்றினை வேறு ஒரு பரிமாணத்திற்கே கொண்டு சென்றுள்ளது.