இந்த நடிகர் 4 சூப்பர்ஸ்டார்களுக்கு சமம்!! நடிகர் பார்த்திபன் புகழாரம்!

0
491

நடிகர் விஜய் சேதுபதி, திரிஷா என பலர் நடித்து கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வெளியான படம் 96. இந்த படத்தின் நூறாவது நாள் கொண்டாட்டம் சமீபத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் மேடையில் பல சுவாரசியமான சம்பவங்கள் அரங்கேறின.இதனை தொடர்ந்து விழா மேடையில் பேசிய நடிகர் பார்த்திபன் விஜய் சேதுபதியை புகழ்ந்து பேசினார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது…

விஜய் சேதுபதி உண்மையிலேயே மக்கள் செல்வன் தான். அவரை மக்களுக்கு மிகவும் பிடிக்கிறது. அதிலும் குறிப்பாக பெண் ரசிகர்கள் அவருக்கு மிகவும் அதிகம். அந்த காலத்தில் எம் கே டி.தியாகராஜ பாகவதர் சூப்பராக இருந்தார். அவர் நான்கு சூப்பர் ஸ்டாருக்கு சமமாக இருந்தார். அதற்கு அடுத்தபடியாக தற்போது விஜய் சேதுபதி அந்த இடத்திற்கு வந்து இருக்கிறார் என்று கூறினார் நடிகர் பார்த்திபன்.