தங்கம் மோதிரம் பரிசளித்த விஜய்…

0
262

நடிகர் விஜய், தனது பிகில் படத்தில், படப்பிடிப்பில் பணிபுரிந்தவர்களுக்கு தங்க மோதிரம் பரிசளித்துள்ளார். அட்லி இயக்கத்தில், ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பில், விஜய் நடித்துள்ள திரைப்படம் பிகில்.

இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு கடந்த ஒரு வார காலமாக தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில், தற்போது விஜய் சம்பந்தப்பட்ட அனைத்து காட்சிகளும் படமாக்கப்பட்டு விட்டன.

இந்நிலையில் நடிகர் விஜய் படப்பிடிப்பில் பணிபுரிந்தவர்களுக்கு “பிகில்” என்று பொறிக்கப்பட்ட மோதிரத்தை பரிசாக அளித்துள்ளார். இது சமூக வலைதளங்களில் அனைவரின் பாராட்டுகளையும் பெற்று வருகிறது.