தலைவி படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் விஜய் தேவரகொண்டா?வெளியான தகவல்

0
125

விஜய் இயக்கத்தில் கங்கனா ரனாவத் நடிப்பில் ஜெயலலிதாவின் வாழ்க்கை கதையை தழுவி உருவாகிவரும் ‘தலைவி’ படத்தில் ஷோபன் பாபு கதாபாத்திரத்தில் நடிக்க நடிகர் விஜய் தேவரகொண்டாவுடன் படக்குழு பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

தற்சமயம் தமிழ், தெலுங்கு மொழிகளில் பிசியாக நடித்துவரும் விஜய் தேவரகொண்டா, இப்படத்தில் நடிப்பது குறித்த அறிவிப்பு கூடிய விரைவில் வெளியிடப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றன.

இப்படத்தில் எம்.ஜி.ஆராக அரவிந்த் சாமி நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.மேலும் சசிகலா கதாபாத்திரத்தில் நடிகை பிரியாமணி நடிப்பதாக அதிகாரபூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியாகியது.