தளபதி 63 படத்தில் விஜயின் கதாபாத்திரத்தின் பெயர் வெளியானது..

0
165

தற்போதய தளபதி விஜய் நடித்துவரும் திரைப்படத்திற்கு தற்காலிகமாக தளபதி 63 என பெயரிடப்பட்டுள்ளது. அட்லீ இயக்கும் இந்த படமானது கால்பந்து விளையாட்டினை மையப்படுத்தியது. அதுமட்டுமல்லாமல் விஜய் இந்த படத்தில் இரட்டை வேடத்தில் நடிக்கிறார். இதில் நயன்தாரா, கதிர், யோகி பாபு மற்றும் சிந்துஜா ஆகியோரும் நடிக்கின்றனர். இந்த படத்தில் விஜயின் கதாபாத்திரத்தின் பெயர் மைக்கேல் என சில மாதங்களுக்கு முன்னர் தகவல்கள் வெளியாகின. ஆனால் மைக்கேல் என்ற பெயர் படத்தில் விஜயின் நண்பரான கதிரின் பெயராகும்.

தளபதி விஜய் இரட்டை வேடத்தில் நடிக்கும் இந்த படத்தின் மகனாக வரும் விஜயின் பெயர் பிகில் என நம்பத்தகுந்த தகவல்கள் வெளியாகியுள்ளன. என்ன தான் படத்தின் தகவல்கள் கசிந்து விடக்கூடாது என படக்குழுவினர் பாதுக்காப்பாக செயல்பட்டாலும். ஒரு சில தகவல்கள் எப்படியாவது கசிந்து விடுகிறது. இந்நிலையில் விஜயின் பெயர் பிகில் என அறிந்த ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here