வெறும் காலில் கடற்கரையில் குப்பைகளை அகற்றிய மோடி..!

0
29

பிரதமர் மோடி சீன அதிபர் ஜின்பிங் இருவரும் நேற்று மாமல்லபுரத்தில் சந்தித்தனர். பின்னர் அங்கு உள்ள சிற்பங்களை இருவரும் பார்வையிட்டனர். அப்போது சிற்பங்களின் சிறப்பு குறித்து பிரதமர் மோடி சீன அதிபர் ஜின்பிங்கிற்கு விளக்கம் கொடுத்தார்.

இன்று சீன அதிபர் ஜின்பிங் பிரதமர் மோடியை 2-வது நாளாக சந்தித்து பேச கோவளம் வருகை தந்துள்ளார். இதற்காக கோவளத்தில் உள்ள ஒரு தனியார் ஹோட்டலில் பிரதமர் மோடி தங்கியுள்ளார்.

இந்நிலையில் இன்று காலை பிரதமர் மோடி நடை பயிற்சியில் ஈடுபட்ட போது காலில் செருப்பு அணியாமல் கடற்கரையில் கிடந்த குப்பைகளை தனது கையால் குப்பைகைளை அகற்றி தூய்மை பணியில் ஈடுபட்டார்.

மோடி சுமார் அரை மணி நேரம்  தூய்மை பணியில் ஈடுபட்டார்.  பிறகு மோடி சேகரித்து குப்பைகளை ஹோட்டல் ஊழியர் ஜெயராஜ் என்பவரிடம் கொடுத்தார். இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்ட பிரதமர் மோடி , பொது இடங்களில் தூய்மையாகவும் , சுத்தமாகவும்  வைக்க பொதுமக்கள் அனைவருக்கும்  வேண்டுகோள் விடுத்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here