ஹைதராபாத் என்கவுண்டருக்கு எதிர்ப்பு தெரிவித்த கனிமொழி…!

0
40

கடந்த சில வாரங்களுக்கு முன்னர் , தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்த்தில் கால்நடை பெண் மருத்துவர், பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, எரித்துக் கொல்லப்பட்டார். நாட்டையே கொந்தளிப்புக்கு உள்ளாக்கிய இந்த சம்பவத்தில், லாரி ஓட்டுநர் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட 4 பேரை, சம்பவம் நடந்த இடத்திற்கு, அழைத்துச் சென்று காவல் துறையினர் விசாரித்தனர்.

அப்போது, தப்பிச் செல்ல முயன்றதால், 4 பேரையும் என்கவுண்டர் செய்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். என்கவுண்டருக்கு மகளிர் அமைப்பினர், பொதுமக்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்களின் பெற்றோர், திரையுலக பிரபலங்கள் உள்ளிட்டோர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

அதையும் தாண்டி என்கவுண்டரில் கொல்லப்பட்ட நபர்களின் பெற்றோர்களும், காவல்துறையின் நடவடிக்கையை வரவேற்றுள்ளனர்.இந்நிலையில், என்கவுண்டர் குறித்து கருத்து தெரிவித்துள்ள திமுக எம்.பி கனிமொழி, என்கவுண்டர் மூலம் தீர்வு காண்பது சரியானது அல்ல என்று கூறியுள்ளார். குற்றவாளிகளுக்கு, நீதிமன்றம் மூலமே தண்டனை பெற்று தந்து இருக்க வேண்டும் எனவும், அரசோ, காவல்துறையினரோ தீர்ப்பை கையில் எடுத்துக் கூடாது என்று திமுக எம்.பி. கனிமொழி பேசியுள்ளார். இந்த நிலையில், கனிமொழியின் எதிர் கருத்து அனைவரையும் அதிருப்தி அடைய செய்துள்ளது.