திடீர் மூச்சுத்திணறலால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரபல பாலிவுட் நடிகர்..!

0
62

நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 20 லட்சத்தினை கடந்துள்ள நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தின் கொரோனா எண்ணிக்கை 5 லட்சத்தினை கடந்துள்ளது. இன்றைய நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் 12,822 பேர் கொரோனா தொற்றால் புதியதாக இம்மாநிலத்தில் பாதிக்கப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதன் காரணமாக ஒட்டு மொத்த கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கையானது 5,03,084 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில் அண்மைக்காலமாக திரைபிரபலன்களும் கொரோனா காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. பிரபல நடிகர் அமிதாப் மற்றும் அவர் மகன் அபிஷேக் ஆகியோர் கொரோனா பாதிக்கப்பட்டு தற்போது நலமுடன் வீடு திரும்பியுள்ளது குறிப்பிடத்தக்கட்டது.

இந்நிலையில் திடீர் மூச்சுத்திணறல் காரணமாக பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பிரபல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு கொரோனா பரிசோதனை எடுக்கப்பட்டு. அதில் கொரோனா நெகடிவ் வந்தாலும் அவர் தொடர்ந்த சில நாட்கள் மருத்துவமனையில் தங்கியிருக்க மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர். சஞ்சய் இது குறித்து வெளியிட்ட ட்விட்டர் பதிவில், தான் நலமோடு இருப்பதாகவும் லீலாவதி மருத்துவமனையில் சிறந்த சிகிச்சை பெற்றுவருவதால் ஒன்றி அல்லது இரண்டு நாட்களில் வீடு திரும்புவேன் என்று குறிப்பிட்டுள்ளார்.