வரலட்சுமி எடுத்த புதிய அவதாரம்…வெளியான நியூ அப்டேட்

0
23

போடா போடி படம் மூலம் நடிகையானவர் வரலட்சுமி சரத்குமார். தமிழ் தவிர்த்து தெலுங்கு, மலையாளம், கன்னட மொழி படங்களிலும் நடித்து வருகிறார். எந்த கதாபாத்திரத்தை கொடுத்தாலும் நச்சென்று நடிப்பார் என்று பெயர் வாங்கியுள்ளார் வரலட்சுமி.நான் பெரிய நடிகரின் மகளாக்கும் என்கிற பந்தா இல்லாதவர். மேலும் நான் நடித்தால் ஹீரோயினாக மட்டும் தான் நடிப்பேன் என்று எல்லாம் அடம் பிடிக்க மாட்டார். வில்லி கதாபாத்திரம் கொடுத்தால் கூட சந்தோஷமாக நடித்துக் கொடுப்பார்.

அவர் ஒரு படத்தில் வில்லியாக நடித்தால் கூட ஹீரோயினுக்கு லைட்டா பயம் வந்துவிடும். தன் நடிப்பால் ரசிகர்களை தன்னை பற்றியே பேச வைத்துவிட்டு, நம் கதாபாத்திரம் டல்லாகிவிடும் என்று பயப்படுவார்கள். அந்த அளவுக்கு நடிப்பு ராட்சசியாக இருக்கும் வரலட்சுமி சரத்குமார் புது அவதாரம் எடுத்துள்ளார்.கண்ணாமூச்சி என்கிற படத்தை இயக்கி, நடிக்கிறார் வரலட்சுமி.

ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்கும் அந்த படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைக்கிறார். படத்தின் தலைப்புடன் கூடிய ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை த்ரிஷா, ஹன்சிகா, சுஹாசினி மணிரத்னம், மஞ்சிமா மோகன், ரகுல் ப்ரீத் சிங், சயீஷா, ஸ்ருதி ஹாசன், சாய் பல்லவி, டிடி, சிம்ரன், காஜல் அகர்வால், சினேகா, ராய் லட்சுமி, தமன்னா, கிருத்திகா உதயநிதி, ஹேமா ருக்மணி, ஆண்ட்ரியா, அக்ஷரா ஹாசன், அதிதி ரவீந்திரநாத், சின்மயி, ரெஜினா கசாண்ட்ரா, கீதாஞ்சலி செல்வராகவன், ஷ்ரத்தா ஸ்ரீநாத் ஆகியோர் ட்விட்டரில் வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.