தளபதியை தொடர்ந்து இன்னொரு மாஸ் ஹீரோவிற்கு வில்லியாகும் வரலட்சுமி சரத்குமார்.

0
264

தமிழ் சினிமாவில் கதாநாயகியாக நடிக்கவே விரும்பும் நடிகைகள் மத்தியில் சற்று மாற்றி யோசிப்பவர் வரலக்ஷ்மி சரத்குமார்.இவர் கதாநாயகியாக நடித்த படத்தை விட குணச்சித்திர வேடங்களில் நடித்த படமே அதிகம்.சர்க்கார் படத்தில் தளபதி விஜய்க்கு வில்லியாக நடித்தார்.தற்போது அதுபோன்று இன்னொரு மாஸ் ஹீரோவிற்கு வில்லியாக நடிக்க உள்ளார்.

அந்த ஹீரோ வேறு யாரும் இல்லை தெலுங்கு சினிமாவில் கொடி கட்டி பறக்கும் மாஸ் ஹீரோ பாலகிருஷ்ணா.ஆம் நடிகர் பாலகிருஷ்ணாவிற்கு தான் வில்லியாக நடிக்க உள்ளார் வரலட்சுமி.இந்த படத்தை இயக்க போவது நம்ம ஊர் இயக்குனர் கே.ஸ்.ரவிக்குமார்.வரலக்ஷ்மி தந்தை சரத்குமாரை “சேரன் பாண்டியன்” “நாட்டாமை” “நட்புக்காக” போன்ற படங்களில் நடிக்க வைத்து மாஸ் ஹீரோவாக ஆக்கியவர் கே.ஸ்.ரவிக்குமார்.தற்போது அவரது மகளுக்கு புது அவதாரத்தை கொடுக்க இருக்கிறார் கே.ஸ்.ரவிக்குமார்.