கட்சிக் கொடியுடன் கமலுக்கு பிறந்தநாள் கேக் தயார் செய்த வனிதா விஜயகுமார்!..

0
12

தமிழ் சினிமாவில் முன்னணி கலைஞராக வலம் வரும் கமல்ஹாசன் அரசியலிலும் ஹீரோவாக வளம் வருகிறார். இன்று தனது 66-வது பிறந்தநாள் காணும் கமல்ஹாசன் கொரோனா காரணமாக கொண்டாட்டத்தை தவிர்க்கும்படி ரசிகர்களை கேட்டுக் கொண்டார்.

இருப்பினும் அவரது பிறந்தநாளுக்கு முன்பே சோஷியல் மீடியாவில் காமென் டிபியை வெளியிட்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் ரசிகர்கள். அதேபோல் அரசியல் கட்சித் தலைவர்கள், திரைபிரபலங்கள் என பலரும் கமல்ஹாசனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். மேலும் ஆழ்வார்பேட்டையிலுள்ள கமல்ஹாசனின் அலுவலகம் முன்பும் ஏராளமான ரசிகர்களும், மக்கள் நீதி மய்ய கட்சித் தொண்டர்களும் குவிந்தனர்.

கமல்ஹாசனின் பிறந்தநாளை மக்கள் நீதி மய்யத்தினரும் ரசிகர்களும் கோலாகலமாக கொண்டாடி வரும் நிலையில் நடிகை வனிதா ஸ்பெஷல் பிறந்தநாள் கேக் ஒன்றை தயார் செய்துள்ளார். அதில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் கொடி இடம்பெற்றிருப்பதோடு கருப்பு நிறத்திலான கேக்கில் சிவப்பு நிறத்தில் நம்மவர் என்றும் எழுதப்பட்டுள்ளது. அதை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கும் வனிதா விஜயகுமார், ஸ்பெஷலாக உங்களுக்காவே பேக் செய்யப்பட்டது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Image

வனிதா தயார் செய்திருக்கும் பிறந்தநாள் கேக்கைப் பார்த்த ரசிகர்கள் அவரை பாராட்டியும் புகழ்ந்தும் கமெண்ட் பதிவிட்டு வருகின்றனர். பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3-வது சீசனில் கலந்து கொண்ட வனிதா கமல்ஹாசன் மீது அதிக அன்பும், மரியாதையும் வைத்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

பிக்பாஸ் மேடையில் கமல்ஹாசனுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்லப்பட்டிருக்கும் ஸ்பெஷல் புரமோ வீடியோவையும் நிகழ்ச்சிக்குழு வெளியிட்டுள்ளது.