யாரும் செய்யாததையா செய்தேன்…குடிபோதையில் வண்டி ஒட்டிய நடிகை கேட்ட கேள்வி

0
30

நடிகை வம்ஷிமா மது அருந்திவிட்டு கார் ஓட்டி போலீசாரிடம் சிக்கியுள்ளார். கோடம்பாக்கம் மேம்பாலம் வழியாக வடபழனி நோக்கி கார் ஒன்று அதிகாலை நேரத்தில் அதிவேகத்தில் தாறுமாறாக சென்றுள்ளது. அதை பார்த்த பிற வாகன ஓட்டிகள் பயந்துவிட்டனர். சிலர் அந்த காரை விரட்டிச் சென்று வடபழனியில் இருக்கும் தியேட்டர் அருகில் பிடித்தனர். காரை ஓட்டியது நடிகை வம்ஷிகா என்பது தெரிய வந்தது. அவர் நிற்கக் கூட முடியாத அளவுக்கு போதையில் இருந்திருக்கிறார்.

இது குறித்து உடனே வடபழனி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் கிடைத்த உடன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

விசாரணையில் நுங்கம்பாக்கத்தில் இருக்கும் ஹோட்டல் ஒன்றில் நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்திவிட்டு வந்தது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் வம்ஷிகா மீது வழக்குப்பதிவு செய்தார்கள்.

வம்ஷிகாவுக்கு ரூ. 10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. பாண்டி பஜார் காவல் நிலையத்திற்கு வம்ஷிகா விசாரணைக்காக வந்தார். அப்பொழுது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது,

என் காரின் பதிவு எண் கர்நாடக மாநிலத்தை சேர்ந்தது என்பதாலேயே பொதுமக்கள் என் வாகனத்தை மடக்கி வாக்குவாதம் செய்தார்கள். நான் மது அருந்தியிருந்தாலும் சுய நினைவோடு தான் இருந்தேன்.

Chennai actress vamshika drunk and drive police fine press meet | Tamil  Nadu News

மது அருந்திவிட்டு காரை ஓட்டியது தவறு தான். ஆனால் இந்த உலகில் யாரும் செய்யாத தவறையா நான் செய்துவிட்டேன். எனக்கு போலீசார் ரூ. 10 ஆயிரம் அபராதம் விதித்தார்கள் என்றார்.

குடிபோதையில் காரை ஓட்டியதும் இல்லாமல், யாரும் செய்யாத தவறையா செய்துவிட்டேன் என்று வம்ஷிகா கூறியுள்ளது விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது.