வால்டர் திரைப்பட விமர்சனம் :சிபி சத்தியராஜின் ‘சூப்பர்-காப் த்ரில்லர்’ …!

0
188

நேர்மையான போலீஸ் அதிகாரிக்கும், சமூகத்தில் பெரிய ஆளாக இருப்பவருக்கும் இடையேயான கதை தான் வால்டர். கும்போகணத்தில் நடக்கும் போராட்டம் ஒன்றில் வன்முறை ஏற்பட கூலாக ஹீரோ வால்டருக்கு அறிமுக காட்சி வைத்துள்ளனர்.

கும்பகோணத்தில் வேலை பார்க்கும் வால்டருக்கு ஹீரோயின் ஷிரின் மீது காதல் ஏற்படுகிறது. இதற்கிடையே அரசியல்வாதியான சமுத்திரக்கனியை போலீஸ் படை என்கவுண்டர் செய்கிறது. இந்நிலையில் கும்பகோணத்தில் பிறந்த குழந்தைகள் கடத்தப்படுகிறார்கள். வீடு திரும்பும் குழந்தைகள் ஒவ்வொன்றாக திடீர், திடீர் என்று இறக்கின்றது.

இது குறித்து விசாரணை நடத்தும் சிபிராஜ் மீது சமுத்திரக்கனி என்கவுண்டர் செய்யப்பட்ட இடத்தில் விபத்தை ஏற்படுத்துகிறார்கள். அந்த விபத்தை ஏற்படச் செய்ததே நட்டி தான். குழந்தைகள் கடத்தப்பட்டதற்கு பின்னால் இருப்பதும் நட்டியே.

சிபிராஜ் நட்டியை கண்டுபிடித்தாரா, குழந்தைகள் ஏன் கடத்தப்பட்டார்கள், வீடு திரும்பிய குழந்தைகள் ஏன் இறந்தன என்பது தான் கதை.

கதை நம்பத்தகுந்ததல்ல, ஸ்கிரிப்ட் குழப்பமாக இருக்கிறது. போலீஸ் விசாரணைக்கும் மருத்துவ த்ரில்லருக்கும் இடையில் இந்த கதை மாறுகிறது. சதித்திட்டத்தில் ஏராளமான சிவப்பு ஹெர்ரிங்ஸ் உள்ளன மற்றும் முடிவில் பெரிய வெளிப்பாடு பார்வையாளர்களை சோர்வடைகிறது.

மொத்தத்தில் வால்டர் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப போலீஸ் திரைப்படம் ஆக இல்லாமல் சிறிது மந்தமான உணர்வை தருகிறது.