செம்ம யூத் லுக்கில் மாறிய தல அஜித்..!வலிமையில் மொத்தம் எத்தனை கெட்டப்?

0
126

‘நேர்கொண்ட பார்வை’ படத்தை தொடர்ந்து அவர் தற்போது, ‘வலிமை’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை வினோத் டைரக்டு செய்கிறார். போனிகபூர் தயாரிக்கிறார். படப்பிடிப்பு சென்னையில் நடைபெறுகிறது.

Thala Ajith's post-injury clean shaven look for Valimai is going viral

அஜித்குமார், ‘பைக்’கில் சாகசம் செய்கிற காட்சியில், ‘டூப்’ நடிகரை பயன்படுத்தாமல், அவரே துணிச்சலாக நடித்துக் கொண்டிருந்தார். அப்போது, ‘பைக்’ சறுக்கியதால் அவர் விபத்தில் சிக்கினார். அஜித் கை, கால்களில் சிராய்ப்பு காயங்கள் ஏற்பட்டன. அதைப்பார்த்து படப்பிடிப்பு குழுவினர் அதிர்ச்சி அடைந்தார்கள்.

Image

இருப்பினும் அஜித்குமார் படப்பிடிப்பை ரத்து செய்யாமல், தொடர்ந்து அந்த காட்சிகளில் நடித்து முடித்தார். அடுத்த நாள் படப்பிடிப்பிலும் முதல் ஆளாக வந்து கலந்து கொண்டார்.

சமீபத்தில், அஜித்தின் ரசிகர்கள் மற்றும் சக ஊழியர்களிடமிருந்து வந்த செய்திகளால் சமூக ஊடகங்கள் பரபரப்பாக இருந்தன, நடிகரின் வரவிருக்கும் படமான வலிமையின் படப்பிடிப்பின் போது ஏற்பட்ட காயத்திலிருந்து விரைவாக குணமடைய ஹாஸ்டேக் தெறிக்க விட்டன.

Image

சமீபத்தில், படப்பிடிப்பில் காயமடைந்த அஜித் ஒரு திருமண விழாவில் கலந்து கொண்டார் .மேலும் நடிகர் அஜித் முற்றிலும் சுத்தமான ஷேவ் தோற்றத்தை வெளியிட்டார். மேலும் அஜித்தின் இந்த நியூ லுக் பில்லா படத்தின் தோற்றத்தை நினைவூட்டுகிறது.

மேலும் அப்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படமும் ,வீடியோவும் வைரலாகி வருகின்றது.