மீண்டும் வரும் வைகைப்புயல் வடிவேலு!! யாருடன்.. யார் படத்தில் தெரியுமா?

0
547

நடிகர் வடிவேலு ஒரு காலத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகராக வலம் வந்தவர். அவர் இல்லையென்றால் படங்களை இல்லை என்ற அளவிற்கு பல நூறு படங்களில் நடித்து அசத்தினார். பின்னர் சில பிரச்சனைகள் காரணமாக அவர் நடிப்பில் இருந்து விலகியுள்ளார்.

மேலும், செந்தில் கவுண்டமணி காம்போவிற்கு பின்னர் பார்த்திபன் மற்றும் வடிவேலு ஜோடி செய்த காமெடி அனைவராலும் ரசிக்கபட்டது. இவர்கள் இருவரும் இணைந்து நடித்த பொற்காலம், வெற்றி கொடி கட்டு போன்ற பல படங்களில் இந்த இணை செய்த காமெடி ஏராளம்.

இந்நிலையில் வடிவேலுவை மீண்டும் அழைத்து வருவேன் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார் பார்த்திபன். இதுகுறித்து சமீபத்தில் பேட்டியளித்த பார்த்திபன், நான் சுராஜ் இயக்கத்தில் நடித்து வரும் படத்தில் வடிவேலுவை கண்டிப்பாக நடிக்க வைப்பேன். படம் இப்போதைக்கு பாதி நிறைவடைந்துள்ளது. இன்னும் சில நாட்களில் வடிவேலு அணைத்து பிரச்னைகளையும் முடித்துவிட்டு நடிக்க வருவார் என்று கூறியுள்ளார்.