வெற்றிமாறன் படத்திற்கான சூர்யாவின் புது கெட்டப்? வைரல் போட்டோ

0
3

சுதா கொங்கரா இயக்கிய சூரியாவின் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட படம் ‘சூரரை போற்று ‘ அமேசான் பிரைம் வீடியோவில் அக்டோபர் 30 ஆம் தேதி வெளியிடப்படுகிறது. விமான முன்னோடி ஜி.ஆர். கோபிநாத்தின் வாழ்க்கையில் இசை ஜி.வி. பிரகாஷ் குமார் மற்றும் சூர்யாவின் ஜோடியாக அபர்ணா பாலமுராலி, மோகன் பாபு, ஜாக்கி ஷிராஃப் மற்றும் பரேஷ் ராவல் ஆகியோரால் ஆதரிக்கப்படுகிறார்கள்.

மேலும் சூர்யாவின் அடுத்த படத்தை வெற்றிமாறன் இயக்க இருப்பதாகவும் இந்த படத்திற்கு வாடிவாசல் என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக பல மாதங்களுக்கு முன்னரே செய்தி வெளியானது. இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளதாக கூறப்பட்டது

இந்த நிலையில் இந்த படத்திற்காக சூர்யா வித்தியாசமான கெட்டப்பில் இருப்பதால் சமீபத்தில் அவர் எங்கேயும் வெளியே செல்லாமல் அந்த கெட்டப்பை ரகசியமாக வைத்து வருவதாக கூறப்பட்டது

சூரரைப்போற்று படத்தில் கிடைத்த லாபத்தின் ஒரு பகுதியான ரூபாய் 5 கோடியை திரையுலகினருக்கு கொடுக்கும் நிகழ்ச்சியில் கூட இதனால் தான் சூர்யா கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் தற்போது நீளமாக முடி வைத்துள்ள சூர்யாவின் புகைப்படம் ஒன்று இணையதளத்தில் கசிந்துள்ளது. இதுதான் வெற்றிமாறன் இயக்கும் ’வாடிவாசல்’ படத்தில் சூர்யாவின் கெட்டப் என சமூக வலைதளங்களில் வைரலாக செய்தி பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது