தப்பு செஞ்சதை உணர்ந்து கொண்ட பாலாஜி..!வெளியான நியூ ப்ரோமோ

0
58

இந்த வாரம் நடைபெற்ற கேப்டன்சி டாஸ்க்கில் சோம், பாலாஜி மற்றும் சம்யுக்தா ஆகிய மூவர் கலந்து கொண்டிருந்த நிலையில் சோம் ஜெயிக்க கூடாது என்றும் அவர் ஒரு கைப்பொம்மை என்றும் நினைத்த பாலாஜி, சம்யுக்தா ஜெயிக்க உதவினார். இதனால் ஆரி உள்பட பலரிடம் இருந்து கடுமையான விமர்சனத்தையும் பாலாஜி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. ஒருகட்டத்தில் பாலாஜிக்கே, சம்யுக்தாவை கேப்டன் ஆக்கியது தவறோ என்ற எண்ணமும் வந்துவிட்டது.

இந்த நிலையில் இன்று ’இந்த வாரம் முழுவதும் சிறப்பாக செயல்பட்டவர்கள் யார்? என்ற பிக்பாஸ் கேள்விக்கு அர்ச்சனா, நிஷா, உள்பட பலர் சோமுவை தேர்வு செய்த நிலையில் பாலாஜியும் சோம் பெயரை குறிப்பிட்டார். மேலும் தன்னால் தான் அவருக்கு கேப்டன் பதவி கிடைக்கவில்லை என்பதையும் அவர் வருத்தத்துடன் தெரிவித்து தனது தவறுக்கு பிராயசித்தமும் தேடிக்கொண்டார். இதுகுறித்து சம்யுக்தா பாலாஜியிடம் கேட்டபோது, ‘நான் தான் அனைவராலும் கார்னர் செய்யப்பட்டிருக்கின்றேன்’ என்று பதில் கூறியுள்ளார்.