டாக்டர்களுக்காக வருத்தப்பட்ட சிவகார்த்திகேயன்…!வித்தியாசமான முறையில் நன்றி…

0
89

தமிழகத்தில் நேற்று புதிதாக 54 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில், தமிழகத்தில் நேற்று மட்டும் சுமார் 90 பேர் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர். பாதிப்பை விட நாளுக்கு நாள் குணம் அடைபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்வதும் நம்பிக்கை ஏற்படுத்துவதாக உள்ளது. கொரோனா பாதிப்பு குறித்து தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 54 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் 27 பேர் சென்னையை சேர்ந்தவர்கள். மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,683 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில், கொரோனா என்பது பாதிக்கப்பட்டவரிடன் இருந்து எளிதில் பரவக்கூடிய நோய் என்று தெரிந்தும் மக்களை காக்க துணிந்து போராடும் மருத்துவர்களை சோகத்தில் ஆழ்த்தும் ஒரு நிகழ்வாக. கொரோனா பாதித்த ஒரு மருத்துவரின் உடலை தங்கள் பகுதியில் அடக்கம் செய்ய மறுத்து மக்கள் போராட்டம் செய்தனர்.

இந்த நிகழ்வு பலரை முகம் சுளிக்க வைத்துள்ளது, இந்நிலையில் இது குறித்து தனது கருத்தினை பதிவு செய்துள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன். அந்த பதிவில் சற்றும் யோசிக்காமல் இந்த இக்கட்டான சூழலில் நமக்காக தன்னலம் இன்றி உழைப்பவர்கள் தான் மருத்துவர்கள், தயவு செய்து அவர்களுக்கு உங்கள் ஆதரவை வழங்குங்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.