தமிழ் சினிமாவில் தனக்கு பிடித்த 3 நடிகர்கள் இவர்கள் தானாம்…!அதிதி ராவ்வின் ஓபன் டாக்

0
173

பாலிவுட் மற்றும் மலையாள திரைப்படங்களில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ள அதிதி ராவ், தமிழில் சிருங்காரம், காற்று வெளியிடை, செக்க சிவந்த வானம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.நடிப்பு மட்டுமல்லாது பின்னணி பாடகியாகவும் வலம் வரும் அதிதி ராவ், தற்போது இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் ‘சைக்கோ’ படத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இந்தப் படம் வரும் 24-ம் தேதி திரைக்கு வர உள்ளது.

இந்நிலையில் சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில் அதிதிராவ் தெரிவித்திருப்பதாவது, தமிழ் சினிமாவில் தனக்கு சூர்யா, அஜித், விஜய் ஆகிய 3 நடிகர்கள் பிடிக்கும் என்றும் வரிசைப்படுத்தியுள்ளார். தனது முதல் காதல் குறித்த கேள்விக்கு பதிலளித்த அதிதி, பள்ளிப்பருவத்தில் தான் என்னுடைய முதல் காதல் மலர்ந்தது என்றும் வெளிப்படையாக கூறியுள்ளார்.

மேலும் சைக்கோ படத்தில் பணியாற்றியது மிகவும் கடினமாக இருந்ததாகவும், ஆனால் மிஷ்கின் இயக்கத்தில் நடிப்பது தனக்கு மகிழ்ச்சி அளிப்பதாகவும் அதிதி ராவ் தனது பேட்டியில் தெரிவித்துள்ளார்.