தியேட்டர்களைத் திறக்க தற்சமயம் சாத்தியமில்லை – அமைச்சர் கடம்பூர் ராஜூ உறுதி

0
78

கொடிய கொரோனா அச்சுறுத்தலால் திரையரங்கம் மற்றும் ஒட்டு மொத்த சினிமாவும் முடங்கி உள்ளது.இந்நிலையில் தற்பொழுது சின்னத்திரை மெல்ல திரும்பி வரும் நிலையில்,மீண்டும் திரையரங்கம் எப்பொழுது திறக்கும் என பல்வேறு தரப்பினர் எதிர்பார்த்து வருகின்றனர்.

இந்நிலையில் அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவிக்கையில் திரையரங்குகளைத் திறக்க தற்சமயம் சாத்தியக்கூறுகள் இல்லை. வெளிநாடுகளில் திரையரங்குளில் ஒரு வரிசையில் இருவர் மட்டும் அமர்ந்து படம் பார்க்கின்றனர். அதை இங்கு நடைமுறைப்படுத்தினால் திரையரங்கு உரிமையாளர்களுக்கு லாபம் கிடைக்காது; நஷ்டத்துடன் இயக்க வேண்டிய சூழ்நிலை வரும். திரைப்படத் துறையினருக்கு தேவையான உதவிகளை தமிழக அரசு செய்து வருகிறது. நாட்டில் உள்ள நிலைமையைப் பொறுத்து திரையரங்குகளைத் திறப்பது பற்றி முதல்வர் முடிவு எடுப்பார் என்றார்.