சிவாஜி ராவ் கைக்வாட் என்ற நபர் சூப்பர் ஸ்டார் ரஜினியாக மாறிய கதை…ரஜினியை பற்றி அறியாத உண்மைகள் சில…!

0
145

சிவாஜி ராவ் கைக்வாட் என்ற பெயரே நமது சூப்பர்ஸ்டாரின் உண்மையான பெயராகும்.சினிமாவில் வந்த பிறகு தனது பெயரை ரஜினி என மாற்றி கொண்டார்.பாலச்சந்தர் இயக்கத்தில் தனது முதல் திரைப்படமான அபூர்வ ராகங்கள் தொடங்கி தற்பொழுது தர்பார்,ரஜினி 168 என தனது 40 ஆண்டு கால வெற்றி திரைப்பயணத்தை பயணித்து வருகின்ற நமது சூப்பர் ஸ்டாரை பற்றி அறியாத உண்மைகளை சில…

பெங்களூரில் ரஜினி நடத்துனர் வேலை பார்த்துக் கொண்டிருந்த போது அவரது சம்பளம் ரூ .750 மட்டுமே.

புராண கன்னட நாடகங்களுடன் தனது நடிப்பு வாழ்க்கையைத் தொடங்கினார். அவரது மிக முக்கியமான பாத்திரம் துரியோதனனின் கதாபாத்திரம் ஆகும்.

திரைப்பட நிறுவனத்தில் கன்னட நாடகத்தில் தான் முதல் முதலில் இயக்குனர் கே.பாலசந்தர் ரஜினிகாந்தை முதல் முறையாக சந்தித்தார். ‘தமிழ் கற்றுக் கொள்ளுங்கள்’ என்று இயக்குனர் ரஜினியிடம் புறப்படுவதற்கு ஏதார்த்தமாக முன்பு கூறினார்.அவர் அப்படி கூரியதற்கான காரணம் ரசிகர்களாகிய நமக்கு இன்று புரிந்திருக்கும் .

ஆரம்ப காலகட்டத்தில் தொடர்ந்து வில்லன் கதாபாத்திரத்தில் நடித்த ரஜினி, ஓரு பாசிட்டிவ் கதாபாத்திரமாக எஸ் பி முத்துராமனின் புவனா ஓரு கேள்விக்குறி படம் மூலம் தான்.இந்த படம் இல்லாமல் இருந்தால் ரஜினி ஒருவேளை நம்பியார் ஆகியிருப்பார் போல …

அந்த கால சினிமாவில் ரஜினியின் முதல் பிளாக் பஸ்டர் திரைபடமென்றால்,பில்லா படம் தான் .இது 1978 ஆம் ஆண்டு அமிதாப் பச்சன் நடித்த டான் படத்தின் ரீமேக் ஆகும்.

மூன்று மூகம் படத்தில் முதல் முறையாக ரஜினியை மூன்று வேடத்தில் நடித்தார். இதன் மூலம் அவருக்கு தமிழக அரசிடமிருந்து சிறந்த நடிகருக்கான விருதைப் பெற்றது.

டி.ராமராவ் அவர்களின் அந்தா கனூன் ரஜினிகாந்தின் முதல் பாலிவுட் படம்.

1988 ஆம் ஆண்டில், ரஜினிகாந்த் ஆங்கில அதிரடி சாகச ப்ளட்ஸ்டோனில் தோன்றினார்.

யு / ஏ சான்றிதழுடன் சென்சார் வாரியத்தால் வெளியிடப்பட்ட சூப்பர்ஸ்டாரின் ஒரே படம் தளபதி ஆகும்.

அவருடன் குழந்தை கலைஞராகவும் பின்னர் அவரது கதாநாயகியாகவும் நடித்த ஒரே நடிகை மீனா மட்டுமே.

1990ம் ஆண்டில் வந்த பணக்காரன், அதிசயபிறவி ஆகிய படங்கள் ரஜினிக்கு கமர்சியல் அந்தஸ்தை ஏற்படுத்தி தந்தன. 1991ம் ஆண்டில் வெளியான தர்மதுரை, தளபதி ஆகிய படங்கள் ரஜினியின் நடிப்புத் திறமைக்கு தீனி போட்டன.

40 ஆண்டுகளை கடந்தாலும், ரஜினியின் வில்லத்தனமான நடிப்பு இன்னமும் மங்கவில்லை. அதை அவரே நிரூபித்துக் கொண்டும் இருக்கிறார்.

ரஜினி எப்போ கட்சி ஆரம்பிப்பார் என ஒரு குரூப்பும், ‘தர்பார்’ படம் எப்போ வரும் என ஒரு குரூப்பும் இருந்தாலும், அவருடைய வில்லன் நடிப்புக்காகவே ஒரு ரசிகர் பட்டாளம் இன்னமும் உண்டு என்பதே நிஜம்…