கிடுகிடுவென உயர்ந்த வெங்காயத்தின் விலை…!இன்று மட்டுமே இவ்வளவு விலையா?

0
111

தொடர் மழை காரணமாக வெங்காயத்தின் வரத்து குறைவதால் தற்பொழுது நாடு முழுவதும் வெங்காயத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.பலரும் வெங்காய விலை உயர்வை கிண்டலடித்து,வேடிக்கையான மீம்ஸ் மற்றும் டிக் டாக் வீடியோவை பதிவிட்டு வருகின்றனர்.

வெங்காயத்தின் விலை குறையும் என்று பார்த்தால் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது .இந்நிலையில்,சென்னை கோயம்பேடு சந்தையில் பெரிய வெங்காயம் கிலோ 180 ரூபாய் வரை விற்பனையாகிறது. சிறிய வெங்காயம் கிலோ 170 ரூபாய் வரை விற்பனையாகிறது.

துருக்கி உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து வெங்காயத்தை இறக்குமதி செய்வதற்கும் மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. வெளிநாடுகளில் இருந்து வெங்காயம் அடுத்த மாதத்தில் இந்தியாவிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், சென்னை கோயம்பேடு சந்தையில், பெரியவெங்காயத்தின் விலை 180 ரூபாய் வரையும், சின்னவெங்காயத்தின் விலை கிலோ 170 ரூபாய் வரையும் விற்பனையாகிறது.

சென்னை கொத்தவால் சாவடியில் பெரியவெங்காயம் கிலோ 150 ரூபாய் முதல் 200 ரூபாய் வரையும், சின்னவெங்காயம் கிலோ 180 ரூபாய் வரையும் விற்பனையாகிறது. மழைக் காலத்தில் வெங்காய விளைச்சல் பாதிக்கப்பட்டு வரத்து மிகவும் குறைந்ததே விலை உயர்வுக்கு காரணம் என வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.