அதிரடியாக சாதனை படைத்த ”ரவுடி பேபி”…!அதிகாரப்பூர்வமாக்கிய யூடியூப்

0
197

கடந்த ஆண்டு கிறிஸ்மஸில் வெளியான தனுஷ் நடித்த மாரி 2, அவரது 2015 ஆம் ஆண்டில் வெளிவந்த மாரி படத்தின் தொடர்ச்சியாகும். பாலாஜி மோகன் இயக்கியுள்ள இப்படத்தில் சாய் பல்லவி, வரலக்ஷ்மி சரத்குமார் மற்றும் டோவினோ தாமஸ் ஆகியோரும் நடித்திருந்தனர்.

ஆனால் மாரி 2 , படமானது ஓரளவு வெற்றியை மட்டும் தான் பெற்றிருந்தது.அதே சமயத்தில் , யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்த மாரி 2 இன் பாடல்கள் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.

குறிப்பாக ”ரவுடி பேபி” பாடல் யூடியூப் தளங்களில் பல மில்லியன் பார்வைகளை கடந்து சென்று அனைவரது விருப்பமான பாடல் வகைகளில் இடம்பெற்றது .

ரவுடி பேபி இந்தியாவில் 2019 ஆம் ஆண்டில் அதிகம் பார்க்கப்பட்ட மியூசிக் வீடியோ என்று இப்போது யூடியூப் அதிகாரப்பூர்வமாக்கியுள்ளது.

மேலும் பில்போர்டால் உலகளவில் அதிகம் பார்க்கப்பட்ட ஏழாவது வீடியோ பாடலாக இது பட்டியலிடப்பட்டுள்ளது. மேலும் ரவுடி பேபி பாடலை பிரபு நடன இயக்குனராக பணியாற்றியுள்ளார்.தனுஷ் மற்றும் Dhee ஆகியோர் பாடியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது .