சுரேஷ் சக்கரவர்த்தியை சாதாரணமா எடை போடாதீங்க…அவரோட இன்னொரு முகத்தை வெளிப்படுத்திய வாரிசு நடிகர்

0
28

தற்போது நடந்து வரும் நான்காவது சீசன் பிக் பாஸ் ரசிகர்களை அதிகம் கவர்ந்து இருக்கும் சுரேஷ் சக்ரவர்த்தி.இந்த நிலையில் சுரேஷை சமீபத்தில் வந்த அர்ச்சனா அவமதிக்கும் வகையில் பேசியிருப்பது குறித்து நடிகர் திலகம் சிவாஜியின் பேரன் சிவக்குமார் தனது சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார். அவர் குறிப்பிட்ட தகவல்கள் சுரேஷ் சக்கரவர்த்தியின் இன்னொரு ஆச்சரிய முகத்தை தெரிவிக்கின்றது.

சன் டிவி எம்டி கலாநிதி மாறன் அவர்களிடம் நேரடியாகப் பேசும் அளவுக்கு அதிகாரத்தைப் பெற்று இருந்தவர் சுரேஷ் என்றும் அவர் சன் டிவி நெட்வொர்க்கின் பல முக்கிய பதவிகளில் இருந்தவர் என்றும் குறிப்பாக ’பெப்சி உங்கள் சாய்ஸ்’ நிகழ்ச்சியின் இயக்குனராக இருந்தவர் என்பதும் கூறியுள்ளார். சன் டிவியில் ‘காமெடி டைம்’ நிகழ்ச்சியின் மூலம் தனது வாழ்க்கையை ஆரம்பித்த அர்ச்சனா, அதே சன் டிவியில் அவர் இருந்த இடத்தை அர்ச்சனா நினைத்துப் பார்க்க வேண்டும்’ என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.சிவாஜி பேரனின் இந்த டுவிட்டர் தகவல் அனைவருக்கும் சுரேஷ் மீது ஒரு மிகப்பெரிய மரியாதையை ஏற்படுத்தியுள்ளது.