“அது என்னைத் தான் பாதிக்கின்றது”…இப்படி பண்ணாதீங்க…யோகிபாபுக்கு வந்த பிரச்சனை..!

0
72

சின்னத்திரை நாடகங்களில் சிறு சிறு வேடங்களில் நடிக்க தொடங்கி தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகர் மற்றும் நகைச்சுவை ஹீரோக்களில் ஒருவராக விளங்குபவர் தான் யோகி பாபு. தற்போது அஜித்துடன் ‘வலிமை’, சிவகார்த்திகேயனுடன் ‘அயலான்’, விஜய் சேதுபதியுடன் ‘கடைசி விவாசாய்’, தனுஷுடன் ‘கர்ணன்’ மற்றும் ‘ட்ரிப்’ உள்ளிட்ட படங்களில் நடித்துவருகிறார். கடந்த 2009ம் ஆண்டில் இவருடைய நடிப்பில் ஒரே ஒரு படம் வெளியான நிலையில் கடந்த 2019ம் ஆண்டில் இவர் நடிப்பில் 16 திரைப்படங்கள் வெளியானது என்றால் அது இவருடைய உழைப்பிற்கு கிடைத்த வெற்றி என்பது ஆகும்.

சின்னத்திரை மூலம் அறிமுகமான இவர் தனது அயராத உழைப்பினால் இன்று மிகப்பெரிய நடிகராக உள்ளனர் என்பது பலருக்கும் உத்வேகம் அளிக்கும் ஒரு விஷயமாக இருக்கின்றது. தனது சமூக வலைத்தளங்களில் பெரிய அளவில் ஆர்வம் காட்டாத இவர் அவ்வப்போது சில பதிவுகளை பதிவேற்றுவது உண்டு. இவர் பெயரில் சில Fake ட்விட்டர் கணக்குகள் வளம் வருவதும் உண்டு.

இப்படி இருக்கையில் தனது திரைப்படங்கள் குறித்து இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்களுக்கு ஒரு காணொளி மூலம் ஒரு வேண்டுகோளை விடுத்துள்ளார். அந்த பதிவில் “சில வருடங்களுக்கு முன்பு நான் நிறைய படங்களில் சிறு சிறு கதாபாத்திரம் ஏற்று நடித்துள்ளேன். அந்த படங்கள் இப்போது வெளியாகி வருகின்றது, ஆனால் அவ்வாறு வெளியாகும் படங்களில் என்னுடைய படத்தை பயன்படுத்தி போஸ்டர் வெளியிட்டு வருகின்றனர். இதனால் ரசிகர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் ஏமாற்றம் அடைவதால் அது என்னை பாதிக்கின்றது” என்று அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.