இன்னும் முப்பதே நாள்- ரசிகர்களுக்கு தளபதி 63 படக்குழு தரும் ஆச்சிரியம்..

0
140

விஜய்- இயக்குநர் அட்லீ கூட்டணியில் தயாராகி வரும் படம் தளபதி 63. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார்.கால்பந்து விளையாட்டு குறித்த கதையம்சம் கொண்ட படத்தில் விஜய் கால்பந்து பயிற்சியாளராக நடிக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் படத்தை பிரமாண்டமாக தயாரிக்கிறது ஏஜிஎஸ் நிறுவனம்.

இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த இரண்டு மாதத்துக்கும் மேலாக பரபரப்பாக நடைபெற்று வருகிறது. தீபாவளிக்கு வெளியாக இருக்கும் இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருக்காக ரசிகர்கள் காத்திருக்கும் நிலையில் விஜய்யின் ஆஸ்தான பாடலாசிரியர் விவேக் இன்னும் 30 நாட்களில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் என்பதை மறைமுகமாக தெரிவித்துள்ளார். இதனால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளார்.