‘மாஸ்டர்’ படத்தின் ரிலீஸ் எப்போது.?படக்குழு வைத்திருக்கும் திட்டம் குறித்து வெளியான தகவல்

0
69

‘தளபதி’ விஜயின் ‘மாஸ்டர்’ கடந்த ஏப்ரல் 9-ஆம் தேதியே வெளியாகவிருந்த இப்படம், கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பூட்டுதல் அறிவிக்கப்பட்டதை அடுத்து, படத்தின் ரிலீஸ் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.படத்தின் அடுத்த அப்டேட்டுக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில், ‘மாஸ்டர்’ படக்குழுவினர் படத்திற்கான தெளிவான திட்டங்களைக் கொண்டுள்ளதாகவும், செப்டம்பர் மாதத்தில் கொரோனா வைரஸ் பயம் முற்றிலுமாக நீங்கிவிட்டால், நவம்பர் 14 ஆம் தேதி தீபாவளி வெளியீடாக திட்டமிடப்படுவதாக தகவல்கள் வெளியாகியுளளன. அப்படியானால், ஆயுதா பூஜையான அக்டோபர் 25-ஆம் தேதி ட்ரைலர் வெளிவரும் என்றும் தெரிகிறது.

இதற்கான மாற்று திட்டத்தையும் படக்குழு கொண்டுள்ளதாக தகவல் உள்ளது. அதாவது COVID 19 தொற்றுநோய் செப்டம்பர் மாதத்திற்கும் மேல் நீடித்தால், ‘மாஸ்டர்’ 2021 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியிடலாம் என்றும், அப்படியானால் டிசம்பர் 25 கிறிஸ்துமஸ் தினத்தன்று ட்ரைலர் வெளியிடப்படும் என திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.