தளபதி 64 படத்தின் வில்லன் யார் தெரியுமா!! கசிந்தது தகவல்…

0
99

தளபதி விஜய் தற்போது பிகில் படத்தில் நடித்துவருகிறார். அட்லீ இயக்கம் இந்த படத்தில் நயன்தாரா கதாநாயகியாகவும், கதிர், யோகிபாபு ஆகியோர் முக்கிய வேடத்திலும் நடித்துள்ளனர். இரட்டை வேடத்தில் நடித்துள்ள தளபதி விஜய் இதில் முதல் முறையாக கால்பந்து கோச்சாகவும் நடிக்கிறார். இந்த படமானது இந்தாண்டு தீபாவளிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து விஜய் தனது 64 வது படத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். ஏதன் படப்பிடிப்பானது விரைவில் துவங்கவுள்ளது. இதில் நாயகியாக நடிக்க ராசி கண்ணா மற்றும் ரஷ்மிகா ஆகியோர் நடிக்கவிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் இந்த படத்தில் வில்லனா ஆக்ஷன் கிங் அர்ஜுன் நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இது தளபதி ரசிகர்களிடம் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.