தமிழகம் அதிரும் விஜய் பட டைட்டில்—இரெண்டு எழுத்தில் மாஸ் காட்டும் தளபதி.

0
428

சர்கார்’ படத்துக்குப் பிறகு அட்லி இயக்கும் படத்தில் விஜய் நடிக்கும் தளபதி 63’ படப்பிடிப்பு மூன்றாவது ஷெட்யூல் நடந்து வருகிறது. இந்தப்படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடிக்கிறார்.இவர்களோடு கதிர், ஜாக்கிஷெராப், ரெபா மானிகா, இந்துஜா, வர்ஷா பொல்லாமா, விவேக், யோகிபாபு, டேனியல் பாலாஜி, ஆனந்தராஜ், தேவதர்ஷினி என்று பெரும் நட்சத்திரப்பட்டாளமே நடித்து வருகிறது. இந்தப் படத்தை 2019 தீபாவளி நாளில் திரைக்குக் கொண்டு வர முடிவு செய்திருக்கிறார்கள்.

விஜய் பிறந்தநாளையொட்டி அடுத்த மாதம் (ஜூன்) 21-ந் தேதி மாலை படத்தின் தலைப்பையும், முதல் தோற்றத்தையும் வெளியிடவிருப்பதாகவும் சொல்கின்றனர்.இந்தப்படத்துக்கு வெறித்தனம், மைக்கேல், மைக்கேல் த சி.எம் என்று மூன்று பெயர்களை அட்லியும் விஜயும் முடிவு செய்திருப்பதாகவும் இதில் படக்குழுவினர் அனைவரும் மூன்றாவது தலைபான ‘மைக்கேல் த சி.எம்’(Michel The C.M) என்ற டைட்டிலுக்கே டிக் அடித்திருப்பதாகவும் நம்பகமான தகவல்கள் நடமாடுகின்றன. படத்தில் விஜய்யின் பெயர் கிளமெண்ட் மைக்கேல்.