அடுத்த படத்திற்கும் அதே இயக்குனரை தேர்வு செய்துள்ளாரா தல அஜித்?

0
294

தல அஜித் தற்போது தீரன் பட இயக்குனர் வினோத் இயக்கத்தில் ஒரு நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தினை போனி கபூர் தயாரித்து வருகிறார், இந்த படத்தின் ஷூட்டிங் முழுவதும் முடிவடைந்து விட்டது.

இந்நிலையில் இபபடத்தின் இயக்குனர் வினோத்தின் அடுத்த படத்தையும் போனி கபூர் தான் தயாரிக்க உள்ளார். இந்த படத்தில் யார் ஹீரோ என தெரியாமல் இருந்தது. தற்போது நேர்கொண்ட பார்வை படத்தின் முழுவதையம் பார்த்த போனி கபூர், படமும் நன்றாக இருக்கிறது, அஜித்தின் நடிப்பும் பிரமாதமாக இருந்ததாக பாராட்டினார்.

அதனால், வினோத் இயக்கும் அடுத்த படத்திலும் அஜித்தான் நடிக்க உள்ளார் என்பது கோட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. இந்த கதை தான் வினோத் முதலில் அஜித்திற்கு கூறிய கதையாம்.