தல 60 படத்தில் இணைந்த பாலிவூட் நடிகை…

0
230

அஜித்தின் 59வது படமான நேர்கொண்ட பார்வை வருகிற ஆகஸ்ட் 8ம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது. படத்திற்கான புரொமோஷன் வேலைகள் தற்பொழுது தீவிரமாக நடைபெற்று வருகின்றன.இதற்கிடையே அஜித்தின் 60 படத்தை தானே தயாரிப்பதாகவும், அப்பட படப்பிடிப்பு ஆகஸ்ட் மாத இறுதியில் தொடங்கும் என்று போனி கபூர் அறிவித்தார்.

மற்றபடி இந்த 60வது படம் பற்றி வேறு எந்த தகவலும் இல்லை. தற்போது படத்தில் முக்கிய வேடத்தில் நடிப்பதன் மூலம் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் தமிழ் சினிமாவில் அறிமுகமாக இருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் தெரிவிக்கின்றன.