தல 60 படத்தின் இயக்குனர் & இசையமைப்பாளர் உறுதியானது–காத்திருக்கும் ரசிகர்கள்..

0
531

விஸ்வாசம் படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து தல அஜித் தற்போது ஹெச். வினோத் இயக்கத்தில் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்து வருகிறார்.இதைதொடர்ந்து அஜித் நடிக்கும் அடுத்த படம் குறித்த அறிவிப்பு ரசிகர்களை குழப்பத்தில் ஆழ்த்தியது.தற்போது தல 60 படத்தின் நம்பகமான தகவல் வெளியாகியுள்ளது.தல 60 படத்தையும் வினோத்தான் இயக்குகிறாராம்.

இது ஃபிரெஷ்ஷான புது கதையாம். இப்படத்தில் ஜிப்ரான் இசையமைப்பாளராக ஒப்பந்தமாகி உள்ளாராம்.அண்மையில் ஜிப்ரான் அஜித்தை சந்தித்து பேசியதும் இதற்காகத்தானாம்.வினோத்தும் ஜிப்ரானும் இணைந்து ஏற்கனவே தீரன் படத்தில் பணியாற்றியிருக்கும் நிலையில் தற்போது அவர்கள் மீண்டும் அஜித் படத்தில் இணையவுள்ளனர்.