தடம் திரைப்பட விமர்சனம்

0
475

தடையற தாக்க,மீகாமன் ஆகிய படங்களை இயக்கிய மகிழ் திருமேணி,மீண்டும் அருண் விஜய்யுடன் தடம் பதித்துள்ளார்..உண்மை சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்ட இந்த படத்தின் விமர்சனத்தை தற்போது பார்ப்போம்…

படத்தில் இரண்டு அருண் விஜய் வருகிறார்கள்.ஒரு அருண் விஜய் (எழில்) நன்றாக படித்தவர்.IITயில் சிவில் இன்ஜினியரிங் முடித்து நல்ல வேலையில் சேர்ந்து சொந்தமாக ஒரு கன்ஸ்ட்ரக்சன் கம்பெனியை நடத்த வேண்டும் என்ற கனவோடு வாழ்ந்து வருகிறார்.இவருக்கும் தனது பக்கத்து அலுவலகத்தில் பணிபுரியும் தன்யா ஹோபுக்கும் (தீபிகா) காதல் மலர்கிறது.இவர்களின் வாழ்கை சந்தோசமாக நகர்கிறது.இது ஒரு புறம் இருக்க..

இன்னொரு அருண் விஜய் (கவின் ) ஒரு 420ஆக வருகிறார்.யோகி பாபு இவருடைய நண்பர்.இருவரும் சேர்ந்து மற்றவர்களை ஏமாற்றி பணம் சம்பாதிக்கின்றனர்.ஏமாற்றுவது,சூதாடுவது,பித்தலாட்டம் செய்வது இவருடைய தொழில்.420ஆக வளம் வந்தாலும் கவின் சிறந்த அறிவாளி,சட்ட நுணுக்கங்கள் அறிந்தவர்.அப்பாவி பெண்ணாக வரும் ஸ்ம்ருதி வெங்கட்டை ஏமாற்றும் கவினுக்கு அவர் மீது ஒரு ஈர்ப்பு ஏற்படுகிறது.

இந்த நிலையில் தான் தீடீரென ஒரு பணக்கார இளைஞர் கொலை செய்ப்படுகிறார்.அதை துப்பு துலக்க காவல் துறையினரான பெப்சி விஜயன் மற்றும் வித்யா பிரதீப் செல்கின்றனர்.அவர்களுக்கு அருண் விஜய் அந்த நாளில் அந்த இடத்தில் இருந்ததற்கான புகைப்படம் ஒன்று கிடைக்கிறது.அதை வைத்து படித்த அருண் விஜயை(எழில்) கைது செய்கிறார்கள்.அடுத்த திருப்பமாக இன்னொரு 420 அருண் விஜயும்(கவின்) போலீஸில் மாட்டுகிறார்.

இருவரையும் பார்த்த காவல் துறையினருக்கு அதிர்ச்சி.இருவரில் யார் கொலையாளி என குழம்புகின்றனர்.இருவரின் பின்புலத்தை விசாரிக்கும்போது மேலும் அதிர்ச்சி காத்திருக்கிறது.இருவரில் யார் கொலையாளி என கண்டுபிடித்தார்களா,அதை ஏன் செய்தார் என்பது கிளைமாக்ஸ்..

படத்தின் பிளஸ்:
டபுள் ரோல் கதாபாத்திரம்,ஒரு கொலை அதை சுற்றி நடக்கும் சம்பவம் ஏற்கனவே பல படங்களில் பார்த்தாலும் இந்த படம் அதிலிருந்து முற்றிலும் மாறுபட்டது.இறுதி வரை கொலையாளி யார் என்பதை நம்மால் யூகிக்க முடியாது.படத்தில் பல முடிச்சுகள் விழும் அது அவிழும் போது நமக்கு இவரா,அவரா என சிந்திக்க வைப்பது இயக்குனரின் வெற்றி.படத்தின் பலம் அருண் விஜய் இரண்டு கேரக்டருக்கும் நன்றாக வேறுபாடு காட்டியிருக்கிறார்.காதல் காட்சிகள் ரசிக்க வைக்கின்றன.படத்தில் காமெடி ஒர்க் அவுட்யாகிருக்கிறது.போலீசாருக்கு தடயம் கிடைத்தும் கொலையாளி யார் என்பதை கண்டுபிடிக்க முடியாமல் திணறுவது ரசிக்க வைக்கிறது.மொத்தத்தில் தரமான திரில்லர் படம் பார்த்த திருப்தி ஏற்படுகிறது…

படத்தின் மைனஸ்:
படத்தில் வரும் அருண் விஜயின் பிளாஷ் பேக் காட்சிகள் சற்று தொய்வை கொடுத்தாலும் பிளாஷ் பேக் முடிந்ததும் படம் மீண்டும் சூடு பிடிக்கிறது.பாடல்கள் சுமார் ரகம்… பிளாஷ் பேக்கில் சோனியா அகர்வால் வருவது எதிர்பாராதது. பிளாஷ் பேக் நீளத்தை சற்று குறைத்திருந்திருக்லாம் என்று தோன்றுகிறது..

மதிப்பீடு:
படத்தின் இறுதில் இந்த சம்பவம் உண்மையில் எங்கெல்லாம் நடைந்திருக்கிறது என்ற தகவல் பார்க்கும்போது நமக்கு ஆச்சிரியம் ஏற்படுகிறது.சிறந்த படம், கண்டிப்பாக திரையரங்கில் பார்க்க வேண்டிய படம்..திரில்லர் விரும்பிகளுக்கு இந்த படம் ஒரு ட்ரீட்தான்.
எங்கள் சினிமாமேடை மதிப்பீடு: 3.5/5