“இன்றுடன் 150 நாட்கள் ஆகிவிட்டது”…முதல்வரிடம் கோரிக்கை வைத்த இயக்குநர் பாரதி ராஜா

0
34

உலக அளவில் பல லட்சம் உயிர்களை பலிவாங்கியது போதாமல் இன்னும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது இந்த கொரோனா தொற்று. இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டபோதிலும் கடந்த மார்ச் மாதம் 25ம் தேதி முதல் வணிக வளாகங்கள், திரையரங்குகள் ஆகிய இடங்கள் சுகாதார முன்னெச்சரிக்கை கருதி பூட்டுதலில் உள்ளது.

மார்ச் 25ம் தேதி தொடங்கி படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட நிலையில் சில வாரங்களுக்கு முன்பு சினிமா சார்ந்த Post Production பணிகள் மற்றும் சின்னத்திரை படப்பிடிப்புக்கு அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் சினிமா படப்பிடிப்புக்கு அனுமதி வழங்கப்படவில்லை. இந்நிலையில் திரையரங்குகள் மூடப்பட்ட 150 ஆகிவிட்ட நிலையில் திரையரங்குகளை திறக்கக்கோரி முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளார் மூத்த இயக்குநர் பாரதிராஜா. தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் இந்த மனு அனுப்பப்பட்டுள்ளது.

அந்த மனுவில் “தமிழகத்தில் பொது முடக்கம் தொடங்கி இன்றோடு 150 நாட்கள் ஆகிவிட்டது. எங்கள் திரைப்படங்கள் திரையரங்குகளில் 150 நாட்கள் ஓடி சாதனை புரிந்தால் அப்படியொரு மகிழ்வும் கொண்டாட்டம் கொள்வோம். ஆனால் பட வெளியீடு இன்றி திரையரங்குகளையும் மூடி, படப்பிடிப்புகளை நிறுத்தி 150 நாட்கள் ஆகிறது என்ற வேதனையை தமிழ் சினிமா முதல் முறையாக இப்போது சந்தித்துள்ளது. 80க்கும் மேற்பட்ட படங்கள் படப்பிடிப்பை நோக்கி நிற்கும் காலகட்டத்தில் நாங்கள் முழுமையாக அரசாங்கத்துடன் நின்று எங்களை கட்டுக்குள் வைத்துள்ளோம்” என்று தெரிவித்துள்ளார்.