மகாராஷ்டிராவில் கட்டுக்கடங்காத கொரோனா..!கேரளவிடம் உதவி கேட்டு 100 பேர் கொண்ட மருத்துவக்குழு குவிப்பு…

0
34
Mumbai Port Trust converts 100-bed facility to 145-bed facility

மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்திய அளவில் 1,90,000 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மகாராஷ்டிராவில் மட்டும் 67,655 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 2,286 பேர் உயிரிழந்துள்ளனர். அதனால் கொரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்த முடியாமல் மகாராஷ்டிரா திணறி வருகிறது.

இந்தநிலையில், மகாராஷ்டிர மருத்துவக்கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநரகம் கடிதம் மூலம் கேரள அரசிடம் உதவி கோரியிருந்த நிலையில், கேரள மருத்துவக்குழு அங்கு சென்றுள்ளது.

கேரளாவில் 1,269 பேருக்கு மட்டும் கொரோனா பாதிக்கப்பட்டுள்ளது. 9 பேர் மட்டுமே உயிரிழந்துள்ளனர். கொரோனாவைக் கட்டுப்படுத்தியதன் மூலம் உலக அளவில் கேரளா கவனம் ஈர்த்துள்ளது.